புதுவையில் இருந்து சென்னை, சேலத்துக்கு புதிய விமானசேவை

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      வர்த்தகம்
flight 2017 09 08

புதுவை விமான நிலையத்திலிருந்து தற்போது பெங்களூர் மற்றும் ஐதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 15-ம் தேதி முதல் புதுவையில் இருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. ஏர் ஒடிஷா நிறுவனம் பயணித்திற்கான முன் பதிவையும் தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுவை வந்தடையும். மீண்டும் மதியம் 1.15 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும். அதேபோல், காலை 9.10 மணிக்கு புதுவையில் இருந்து புறப்படும் விமானம் காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் விமானம் மதியம் 1 மணிக்கு புதுவை வந்தடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து