முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் 10 கோடியில் புதிய குடி நீர் தடுப்பணை

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல் -- கொடைக்கானலில் 10 கோடி ரூபாயில் புதிய குடி நீர் தடுப்பணை அமைக்கப்படும் என்று நகராட்சி மண்டல இயக்குநர் ஜானகி தெரிவித்தார்.
 கொடைக்கானலில் நவீன இறைச்சிக் கூடம் அமைய உள்ள இடங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை நகராட்சி மண்டல இயக்குநர் ஜனகி ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
 கொடைக்கானல் நகராட்சி பகுதியில் நவீன இறைச்சி கூடம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் வியாபாரிகள், பொதுமக்கள், அனைவருக்கும் ஏற்ற இடம் தேர்வு செய்யப்படும். கொடைக்கானலில் சேதம் அடைந்த சாலைகள் டுரிப் திட்டப்படி சீரமைக்கப்படும். குடி நீர் திட்டத்தால் சேதமடைந்த அண்ணா சாலை நகராட்சி நிதியிலிருந்து சீரமைக்கப்படும்.
 கொடைக்கானலில் அனுமதியற்ற கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானலின் முழுமைதிட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
 கொடைக்கானலின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒரு தடுப்பணை அமைக்கப்படும். இந்த பணி விரைவில் துவங்கும். மாடர்ன் மார்க்கெட், கம்யூனிட்ட ஹால் உள்ளிட்ட தேவைகள் கார் பார்க்கிங் வசதிகள் உள்ளிட் பணிகள் நடை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது கொடைக்கானல் நகராட்சி கமிசனர் முருகேசன், மண்டல பொறியாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
பட விளக்கம்: கொடைக்கானலில் நவீன இறைச்சிக் கூடம் மற்றும் வளர்ச்சி பணிகளை நகராட்சி மண்டல இயக்குநர் ஜானகி ஆய்வு செய்தார், உடன் அதிகாரிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து