மாநில அளவில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகள்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
BTL NSVV  news

வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி என்-.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பள்ளி அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த மாதம் ஜீலை 28 முதல் 30 தேதி வரை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லு£ரியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றுள்ளது. இதில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், சென்னை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த சுமார் 16 கூடைபந்தாட்ட அணியினர் பங்கேற்று-விளையாடியுள்ளனர். இதில் திண்டுக்கலிருந்து சென்ற பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.பள்ளி மாணவிகள் இறுதி போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். இம்மாணவிகளையும் பயிற்சியளித்த கூடைபந்தாட்ட பயிற்சியாளர் செந்தில்குமார் ஆகியோரை பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் ராஜாராம், பள்ளிகளின் ஆலோசனை குழுத்தலைவர் மோகன்அருணாச்சலம், பள்ளி தலைவர் கருணாகரன், செயலர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்
படம் மாநில அளவில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகளை வாழ்த்திய பள்ளி நிர்வாகிகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து