கொடைக்கானல் மலைப்பகுதியில் யானைகள் கண்காணிப்பு குழு

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
kodaikanal forest department elephent  news

 கொடைக்கானல்- - கொடைக்கானல் மலைப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறை சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
 கொடைக்கானல் மலைப் பகுதியில் சமீப காலமாக யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. விளை நிலங்களை விளை பொருட்களை யானைகள் நாசம் செய்து வருகின்றது. அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றது. நேற்று முன்தினம் யானை தாக்கி மூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையினை கண்காணித்து மனிதர்கள் யானைகள் மோதலை தவிற்க கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி யானைகள் கண்காணிப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
 இந்த குழு கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள யானைகள் நடமாடும் இடங்களான வடகவுஞ்சி, பெரும்பள்ளம், பி.எல்.n~ட், அஞ்சுரான்மந்தை, பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் யாணைகளின் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். வனவர் முருகேசன் தலைமையில் 12 பேர்கள் கொண்ட இந்த குழுவினர் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படுவார்கள். யானைகள் இந்த கிராம பகுதிக்குள் நுழையாத வண்ணம் மெகா போன், வெடிகள் மற்றும் சில உபகரணங்களை வைத்து விரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல் இரவு நேரங்களில் இந்த பகுதியினை சேர்ந்த கிராம மக்கள் வனப்பகுதிக்குள் செல்லதவாறும் கண்காணிப்பார்கள் இந்த குழுவினர். கிராம மக்களுக்கு இந்த குழுவினர் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவர். யானைகள் நடமாட்டம் பற்றி இந்த குழுவினர்க்கு தகவல் தரலாம்.
 கொடைக்கானலில் புலிகள் நடமாட்டம் பற்றி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றது. கொடைக்கானல் மேல் மலைப்பகுதியில் புலியினை சுட்ட வழக்கில் உள்ள குற்றவாளி தன சுந்தரம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை கொடைக்கானல் ரேஞ்சர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து