முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக 13 ல் ஸ்ரீவில்லிபுத்தூர் திருஆடிப்பூர தேரோட்டம்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
Image Unavailable

ஸ்ரீவில்லிபுத்தூர்-  தமிழக அரசின் சின்னமான விளங்குவதும் வைணவத் தலங்களில் திருப்பதிக்கு அடுத்து பேசக்கூடிய வகையில் விளங்கக்கூடிய இடமாகவும் இருக்கின்ற ஆண்டாள் பிறந்த பூமியான ஸ்ரீவில்லிபுத்தூரில் திருஆடிப்பூர ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 16.8.2018 வரை 10 நாட்கள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக 13.8.2018 அன்று திருஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று காலை 7.20 மணிக்கு ஆன்றோர்கள் அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆண்டாள் திருத்தேரை வடம்பிடித்து இழுக்க உள்ளனர். 4 ரதவீதிகள் சுற்றி விரைவாக கீழரதவீதியிலிருந்து நிலையத்தை தேர்அடையும். 5ம் நாளான 9.8.2018 வியாழக்கிழமையன்று ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீபெரியாழ்வார், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கால் அப்பன் ஆகிய ஐவரும் ஒரே நேரத்தில் எழுந்தருளி ஐந்து கருட சேவை என்கிற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஞாயிறன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சந்திரபிரபா முத்தையா தக்கார் கே.ரவிச்சந்திரன் செயல் அலுவலர் மு.நாகராஜன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, திருவி கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், அஇஅதிமுக நகர செயலாளருமான எஸ்எம் பாலசுப்பிரமணியம், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர்கள் மூக்கன், ராமகிருஷ்ணன், மலர்விழி, பாலாஜி பட்டர், முத்துபட்டர், ரமேஷ் பட்டர், சுதர்சன், வாசுதேவன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் தலைமையில் செயல் அலுவலர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர். திருத்தேரோட்ட விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் திருக்கோயிலில் வைத்து கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாலையில் நடைபெறும். தேர் 4 ரதவீதிகளிலும் வருவதையொட்டி நகர நிர்வாகத்தின் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தீயணைப்புத்துறை, பொதுசுகாதாரத் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் விழாக்கால நாட்களில் திருக்கோயிலில் பணியாளர்கள் இருந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டிய உதவிகளை செய்வார்கள். 4 ரதவீதிகள், 4 மாட வீதிகளில் சுகாதாரத்தை முறையாக பேணுவதற்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் பணியாளர்கள் காலை மாலை இருவேளைகளிலும் பணியில் இருப்பார்கள். ஒட்டுமொத்தமாக பக்தர்களை பாதுகாப்பதற்கும், முறையாக அறிவுறுத்துவதற்கும் நகர் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தக்கார் ரவிச்சந்திரன் கூறும்போது ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வரை சிறப்பாக நடைபெற உள்ளது. 13.8.2018 திங்கள் அன்று ஆண்டாள் திருத்தேர் வடம்பிடித்து இழுக்க உள்ளது. பொதுமக்களும் பெரியோர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் திருக்கோயில் நிர்வாகத்தின் தரப்பில் செய்து தரப்பட்டுள்ளன என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து