ராமேசுவரத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மன் தேரில் வலம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rms news

  ராமேசுவரம்,ஆக,12: ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு பர்வதவர்த்தினி அம்மன்  மரத்தேரில் நான்கு ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்த நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆடித்திருவிழா   கொடியேற்றத்துடன் துவங்கியது.   திருக்கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் பர்வதவர்த்தின் அம்மன் சன்னதியில் தினசரி  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.அதுபோல அம்மன் அலங்காரத்தில்  தினசரி ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதையடுத்து திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மன் தேரோட்டம் நிகழ்ச்சி திருக்கோயிலில் நடைபெற்றது.இந்த நிகழச்சியையொட்டி திருக்கோயிலில் அம்மன் சன்னதியில் அதிகாலையில்  சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அம்மன்  அலங்காரத்துடன் திருக்கோயிலிருந்து காலை 9.30 மணிக்கு கீழரத வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மரத்தேரில் எழுந்தருளினர்.அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் மரத்தேரை திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி,திருக்கோயில் இணைஆணையர் மங்கையர்க்கரசி ஆகியோர்கள்  வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்துக்கொண்டு  நான்கு ரத வீதியில் வலம் வந்தனர்.தேரோட்டம் நிகழ்ச்சியில் திருக்கோயில்  உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை,கண்ணன்,கலைச்செல்வம், செல்லம்,இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், யாத்திரைப்பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து