எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா அரசின் திட்டங்களை மக்களிடம் முன்னிறுத்தி அமோக வெற்றி பெறுவோம்! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      மதுரை
rpu news

 திருமங்கலம்.- வருவது எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா அரசின் திட்டங்களை மக்களிடம் முன்னிறுத்தி அமோக வெற்றி பெற்றிடுவோம் என்று திருமங்கலம் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபடத் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஆலம்பட்டி, கட்ராம்பட்டி  ,அச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நலிவடைந்த குடும்பங்களுக்கு கழக அம்மா பேரவை சார்பில் தலா 10ஆயிரம் ரூபாயை குடும்பநல நிதியாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
அம்மா அரசின் சரித்திர சாதனைகளை    நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.கடந்த 17 மாத கால ஆட்சியில் 32 ஆயிரம் தடைகற்களை தகர்த்து எறிந்து மக்களுக்கு சீர்மிகு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.குறிப்பாக 23ஆயிரம் கோடியில் 50ஆயிரம் திட்டப்பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதல்வர் திறந்து வைத்திருக்கிறார்கள்.48ஆயிரம் கோடிக்கு 60ஆயிரம் புதிய திட்டபணிகள் இன்றைக்கு நடைபெற்று வருகிறது.இந்த பணிகளும் விரைவில் முடிவடைந்திடும்.இந்தியாவிலே சிறந்த நிர்வாகத்திற்காக மக்களின் நலன் காத்திடும் அரசாக கேரள மாநிலத்திற்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.அம்மாவின் லட்சியக் கனவான அன்னைத் தமிழகம் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்திடும் லட்சியத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறோம்.இருப்பினும் குறிப்பிட்ட சில துறைகளில் நாம் இந்தியாவிலே முதலிடத்தில் இருக்கிறோம்.ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.முதலில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்திக் காட்டி அம்மா சரித்திர சாதனை படைத்துள்ளார்.அனைத்து வசதிகளும் ஒருங்கே கிடைத்திடும் இடமான தமிழகம் அதிகளவு முதலீடுகளை கவர்ந்து வருகிறது.இருப்பினும் எதிர்கட்சியினர் அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைத்து 32ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து கடைக் கோடியிலிருப்பவர்களுக்கும் அம்மாவின் சீர்மிகு திட்டங்களை கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.அதை மக்களிடம் எடுத்துச் சொல்லிட ஊர் ஊராக எடுத்துச் சென்றிட கழக அம்மா பேரவையின் சார்பில் சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் மூலம் எதிர்கட்சியினர் மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரங்;கள்  முறியடித்திடும் வகையில் இந்த சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த முயற்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமாக திகழ்ந்திடும்.
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்காக அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை அவர்கள் நடத்தி இருப்பவர்களுக்கே பத்து பொறுப்புகளை வழங்குகிறார்கள்.திரும்பத் திரும்ப அவர்களுக்கே பல்வேறு பதவிகள் வழங்கப்படுகிறது.ஒருவரே அமைப்பு செயலாளர்,அவரே மாவட்டச் செயலாளர்,அவரே கிளைச் செயலாளர் என  ஒருவரே அனைத்து பதவிகளையும் வகிப்பது புதிய முறையாக இருக்கிறது.அம்மா இருக்கும் போது ஒருவருக்கு அரசு பொறுப்பு ஒன்று இருக்கும் கழக பொறுப்பு ஒன்று இருக்கும்.அங்கு  உழைப்பிற்கோ தியாகத்திற்கோ இடம் கிடையாது.யார் கேட்டாலும் பதவிகளை அளவீடுகள் இல்லாமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒட்டு மொத்தமாக நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு அம்மா அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள்.அதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு சாத்தியக்கூறுகளை கண்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்வதுடன் இது போன்ற திட்டங்களுக்கு உரிய முன்னுரிமை கொடுக்கப்படும். நமது பகுதியில் உள்ள 58-ம் கால்வாய் திட்டம் தற்போது சோதனை  ஓட்டத்தில் உள்ளது.மிக விரைவில் அதில் தண்ணீர் வருகிற காட்சியை நாம் காண இருக்கிறோம்.இந்த திட்டத்தை மிக விரைவில் முதல்வர் நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறார்கள். பொதுவாக துயர சம்பவங்கள் நடைபெறும் சமயத்தில்  பல்வேறு தலைவர்கள்  வரும் போது நம்மிடம் உள்ள காவல்துறையை பயன்படுத்திஉச்சகட்ட பாதுகாப்பு வழங்குவது நமது மரபாகும்.காவல் துறையின் நடைமுறைப்படி அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து ராகுல்காந்தி எங்கும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.இங்கிருப்பவர்கள் சிலர் அரசியல் காரணங்களுக்காக சொல்கிறார்களே தவிர ராகுல்காந்தி சொன்னதாக தகவல் இல்லை.எந்தவித சட்;டம் ஒழுங்கு பிரச்சனையும் இன்றி சமாளித்து அம்மாவின் அரசு இதில் வெற்றி பெற்றுள்ளது.
வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மாவுடைய அரசின் சாதனைகளை தியாகங்களை முன்னிறுத்தி மக்களை நேரில்சந்தித்து வெற்றி பெறுவோம்.தமிழ்நாடு என்றால் எப்போதுமே இரட்டைஇலை தான் மக்களுக்கு பிடித்த சின்னம்.இந்தியாவிலே 3வது பேரியக்கமாக  அ.தி.மு.க வர உதவியாக இருந்தது இரட்டை சின்னம்.மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ள சின்னமான இரட்டைஇலை என்றுமே வெற்றி பெற்றிடும்.தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்திடும்.அதற்கு கட்டுப்பட்டு ஒன்றரை கோடி தொண்டர்களும் செயல்படுவோம்.புதிய புதிய திட்டங்கள்வந்து கொண்டே இருக்கிறது.மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசு நாள்தோறும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.எய்ம்ஸ் மருத்துவமனை,பஸ்போர்ட்,ஸ்மார்ட் சிட்டி போன்ற அனைத்து திட்டங்களும் புதியவைதான்.பஸ்போர்ட் குறித்த அறிவிப்பை  முதல்வர் விரைவில் வெளியிடுவார்கள்.அரசியல் காழ்ப்பணர்ச்சி காரணமாக தொடுக்கப்படுகிற அந்த வழக்குகள் என்பதை நாங்கள் பலமுறை  மக்களிடத்தில் சொல்லியிருக்கிறோம்.அது உண்மை என்பது இன்றைக்கு வெட்;டவெளிச்சமாகியுள்ளது.ஒரே நாள் இரவு வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப்படுகிறது.அவர்களுக்கு என்றால் ஒருநீதி மற்றவர்களுக்கு என்றால் ஒருநீதி என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்துள்ளது.மக்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.அவர்களுக்கு என்றால் அனைத்தையும் வாபஸ் வாங்குகிறார்கள்.மற்றவர்களுக்கு என்றால் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.அம்மா முதல்அமைச்சராக இருந்த போது உயிர் பிரிந்தது.அது மரபுப்படி அங்கே இடஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கொடுக்கப்பட்டது.நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்ற காரணத்தினால் இடம் ஒதுக்க இயலவில்லை என்றகாரணத்தை முதல்வர் சொல்லும் போது உடனடியாக வழக்கு வாபஸ் வாங்கப்படுகிறது.இதிலுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்;ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம்,ராமசாமி,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,அவைதலைவர் அன்னகொடி,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், பாவடியான்,பாஸ்கரன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து