மதுரை மாநகராட்சியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu corp news

மதுரை,-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   தலைமையில்  -எடுக்கப்பட்டது.
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று நல்லிணக்க நாள் உறுதிமொழியினை ஆணையாளர்               மரு.அனீஷ்சேகர், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழி
 நான் சாதி, இன, வட்டார, மதம் அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.
 என அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனை போன்று அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில்; துணை ஆணையாளர்  .ப.மணிவண்ணன், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து