விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆலோசனை

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu pro news

மதுரை,-  விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு  குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்   தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்    தெரிவித்ததாவது.
 விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்; போது, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்றும், புதியதாக அனுமதி ஏதும் வழங்ககூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட பாதையிலேயே ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும், விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்களில் சிலையினை நிறுவிய நபர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வரவேண்டுமென்றும், எளிதில் சிதையக்கூடிய களிமண் மற்றும் காகிதக்கூழ் போன்றவற்றில் மட்டுமே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் எக்காரணத்தை முன்னிட்டும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்ட்( Pடயளவநச ழக Pயசளை) மற்றும் காரியம் பயன்படுத்தப்பட்டிருக்கும் இராசாயன வர்ணம் ஆகியவற்றினால் ஆன சிலைகள் அமைக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும் என்றும், பிற மதத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் பட்சத்தில் மதவேற்றுமையை தூண்டக்கூடிய கோஷங்களை எழுப்பக் கூடாது. மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் அனைத்து மதத்தலைவர்களுடனும் இணக்கமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விழாவினை நடத்திட வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிலைகள் ஊர்வலத்தின்போது தங்குதடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், உயரமான சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பட்சத்தில், அவற்றினால் விபத்து ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மின்சார வாரியத்தினரிடம் அறிவுறுத்தினார்.
  விநாயகர் சிலைகளை மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வைகை வடகரை கீழ்த்தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம் (திருமலைராயர் படித்துறை), திருப்பரங்குன்றம் செவந்திகுளம் கண்மாய், அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாய், மேலூர் வட்டத்திற்குட்பட்ட மண்கட்டி தெப்பக்குளம், கொட்டாம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் தெப்பம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோவில் ஊரணி, பெரியாறு கால்வாய், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட நீர் அதிகம் உள்ள கிணறுகள், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட குண்டாறு, மறவன்குளம் கண்மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டலநதி மற்றும் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊரணி, எழுமலை பெரிய கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய் போன்ற இடங்களில் மட்டுமே விசர்ஜனம் செய்ய வேண்டும்.
மேலும், விநாயகர் சதுர்த்தி திருவிழாவினை நல்ல முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.நடராஜன், கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உதவி பயிற்சி ஆட்சியர்  கே.என்.பிரவீன் குமார், காவல்துறை உதவி ஆணையர்  அருண்சக்தி கோபால்,  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து