சானியாவிடம் முறை தவறி நடந்ததாக வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது சோயிப் மாலிக் திடீர் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 2 செப்டம்பர் 2018      விளையாட்டு
Sohib Malik Complaint 2018 9 2

லாகூர் : இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முறை தவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து சானியா மிர்சா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி வங்கதேச வீரர் ஒருவர் நடந்ததாகக் கூறி அவரின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை கிரிக்கெட் கமிட்டி ஆப் தாகா மெட்ரோபோலிஸ்(சி.சி.டி.எம்) அமைப்பின் தலைவரிடம் சோயிப் மாலிக் வழங்கியுள்ளார் என்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக் குரிய வீரர் எனப் பெயரெடுத்தவர். 26 வயதான சபிர் ரஹ்மான் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சில வாரங்கள் சஸ்பெண்ட் செய்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

அதன்பின் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதால், சபீர் ரஹ்மான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், இதையடுத்து இவர் மீது 6 மாதங்கள் வரை தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து