நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கழகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படுவோம் வெற்றி பெறுவோம் ஆலோசனை கூட்டத்தில மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேச்சு

வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2018      தேனி
7 ravi news

தேனி- பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மாவட்ட  கழகத்தின் சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் கழக பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார்.
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் பேசும்போது வாக்காளர் பட்டியலில்; பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசும்போது பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக நமது கழகம் இருந்து கொண்டிருக்கிறது. அரசியல் புரட்சி செய்தவர் எம்.ஜி.ஆர். பெண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுமார் 16 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்தார். தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இணைந்து அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதல் மாநிலமாக, சிறந்த மாநிலமாக உருவாக்கி இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற  முதல் தொகுதியாக தேனி தொகுதி இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க, நம் கழகத்தினர் ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.
 மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேசும்போது, நமது கழகத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தோற்றுவித்தபோது அவருக்கு உறுதுணையாக  கழகத்தை வளர்த்ததும், அசைக்க முடியாக எஃகு கோட்டையாக உருவாக்கியது அதிமுக தொண்டர்களின் உழைப்பும், உயிர் தியாகமுமே ஆகும். நமது கழகத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். 1972 ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நமது இயக்கத்தை ஆரம்பித்தபோது எவ்வளவோ சோதனைகள். அவற்றையெல்லாம் வெற்றி கண்டு 1977ல் புரட்சித்தலைவர் தலைமையில் நமது கழக ஆட்சி தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நடைபெற்றது. புரட்சித்தலைவரின் மறைவுக்கு பின் கழக பொதுசெயலாளரான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1991ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் கழக ஆட்சியை கொண்டு வந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை திட்டங்களாக்கி, அத்திட்டங்களை குக்கிராமங்கள் வரை அனைத்து மக்களுக்கும் பயனடைய கொண்டு சென்றார்.
திமுக எப்படிப்பட்ட கட்சி, அதிமுக எப்படிபட்ட கட்சி என்று மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அதிமுக தான் மக்களின் தேவைகளை  நிறைவேற்றி, நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைக்க செய்கின்ற கட்சி என்று புரிந்து வைத்திருந்ததால் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற நமது கழகத்திற்கு 37 இடங்களில் வெற்றி என்ற மிகப்பெரிய பரிசை தமிழக மக்கள் வழங்கினர். மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முல்லை பெரியார் அணை பிரச்னையில் சட்டப்போராட்டம் நடத்தி 142 அடி வரை நீரை தேக்கி கொள்ள ஆணை பெற்றுத் தந்து 5 மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை பெற்றுத்தந்ததற்கு தேனி பாராளுமன்ற தொகுதி மக்கள் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஆர்.பார்;த்திபன் எம்.பி அவர்களை வெற்றி பெற செய்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தற்போது
இல்லை. நமது இயக்கம் தொடர்ந்து தொண்டர்களின் இயக்கமாக,  உண்மையாக உழைக்கின்ற தொண்டர்களும் பதவிகளை பெற வேண்டும்   என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து கழகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். மேலும் அம்மாவின் அரசு, அம்மாவின் கனவை நனவாக்க உழைத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது நாம் தேர்தல் களத்திற்கு தயாராகும் வகையில் முதல் படியில் ஏறியிருக்கின்றோம். தற்போது வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சீர் செய்ய வேண்டும்.
வார்டில் வெற்றி பெறாதவர்களுக்கு கூட மாநில, மாவட்ட பதவிகளை ஒரு கட்சி வாரி வழங்கி கொண்டிருக்கிறது. இது போன்று யாரு, எப்படிப்பட்டவர்கள் வந்தாலும், என்ன வித்தை காண்பித்தாலும், தேர்தல் களத்தில் நாம் ஒற்றுமையாக பணியாற்றினால் அனைத்து தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்று சிறப்புரையாற்றினார். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் நன்றி கூறினார்.
 இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தேனிமுருகேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், நகர செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, தேனி வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்,  கம்பம் சோலைராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், போடி பழனிராஜ், கம்பம் ஜெகதீஸ், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன், ஆண்டிபட்டி லோகிராஜன், கடமலை-மயிலை கொத்தாளமுத்து. கம்பம் இளையநம்பி, உத்தமபாளையம் பி.ஆர்.பி.அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், போடி சற்குணம் மற்றும்  வடுகபட்டி சுந்தரபாண்டியன், பழனிசெட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி உள்ளிட்ட அனைத்து பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜ்,  மாவட்ட பாசறை செயலாளர் நாராயணன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன்,  மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து