உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
earthquake

லக்னோ : உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் நேற்று காலை 6.28 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. மீரட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கார்காவ்டா பகுதியை மையமாக கொண்டு நிகழ்ந்ததாக அமெரிக்க புவிசார்மையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று முன்திமனம் மாலை தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து