Idhayam Matrimony

20 வயது குறைந்திருக்கிறது: செங்கோட்டையன் பேச்சு

திங்கட்கிழமை, 9 பெப்ரவரி 2026      தமிழகம்
Sengottaiyan 2025-11-18

கோவை, எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார் என்று கோவையில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார். இரவு, பகல் பாராமல் உழைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். கொங்கு மண்டலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் லட்சியம். ஒரு நாட்டை மாற்றுவதற்கு நல்ல தலைமை தேவை. 

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 2 தலைமைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். ஆனால் அவர்களுக்குப் பிறகு நடக்கின்ற ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்தையும் மாற்றக் கூடிய சக்தி த.வெ.க. தலைவர் விஜய்யிடம் மட்டும்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து