முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிரி ஏவுகணையை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர், எதிரியின் ஏவுகணையை இடை மறித்து அழிக்கும் பி.டி.வி. ஏவு கணையை இந்தியா வெற்றி கரமாக பரிசோதித்துள்ளது.

ஒடிசாவின் பாலோசோர் அருகே அப்துல் கலாம் தீவில் உள்ள (வீலர் தீவு) ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து  இரவு 8.05 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இந்நிலையில் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது இந்த ஏவுகனை.

இதுகுறித்து டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, “பிரித்வி பாதுகாப்பு வாகனம் (பிடிவி) என்ற இந்த ஏவுகணை, பூமியின் காற்று மண்டலத்திற்கு அப்பால் 50 கி.மீ. உயரத்தில் இலக்குகளை அழிக்கும் நோக்கத்தில் தயாரிக்கப் பட்டது. சோதனையில் பி.டி.வி .ஏவுகணையும் இலக்குக்காக செலுத்தப்பட்ட ஏவுகணையும் வெற்றிகரமாக செயல்பட்டன” என்றார்.

எதிரி ஏவுகணையை உடனடியாக கண்டறிவது, வானில் அது வரும் பாதையை துல்லியமாகக் கணிப்பது, வானில் அதை இடைமறிப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் ரேடார் மற்றும் கணினி மூலம் தானாகவே நடைபெறும் வகையில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி மூலம், இரண்டு அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு முறையை மேம்படுத்துவதில் இந்தியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து