உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட ஒவ்வொருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      சிவகங்கை
3 siva news

   சிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், மாங்குடி ஊராட்சியில் பொது சுகாதாரத்துறையின் மூலம்  புதிதாக கட்டப்பட்ட நலவாழ்வு மைய கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   அமைச்சர் ஜி.பாஸ்கரன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து   தெரிவிக்கையில்,
        தமிழக முதலமைச்சர்;, புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருவதுடன் புரட்சித்தலைவி அம்மா   போல் தமிழ்நாடு முதலமைச்சர் பொது சுகாதாரத்துறைக்கு தனிக்கவனம் எடுத்து தேவையான நிதிகளை ஒதுக்கி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகம் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. இதை நிருபிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழகத்திற்கு பொது சுகாதாரத்துறைக்கு என நான்கு விருதுகள் வழங்கியுள்ளன.  எல்லா மருத்துவமனைகளிலும் அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.
        இந்த வசதிகள் கிராமப்பகுதிகளிலும் முழுமையாக கிடைத்திடும் வண்ணம் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள துணை சுகாதார நிலையங்களும் புணரமைக்கப்பட்டு நலவாழ்வு மையமாக செயல்பட்டு வருகின்றன. சிவகங்கை வட்டாரத்தில் 23 துணை சுகாதார நிலையங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக செயல்படத் துவங்கியுள்ளன. இந்த ஒவ்வொரு மையத்திலும் இரண்டு செவிலியர் சுழற்சி முறையில் பணி மேற்கொள்ளவும், மேலும் தினந்தோறும் நல்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வருபவருக்கு தேவையான இரத்த பரிசோதனை மற்றும் இ.ஜி.சி., போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு உயர்சிகிச்சை தேவைப்படில் அருகாமையிலுள்ள வட்டார சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி தற்பொழுது தொழில்நுட்ப உதவிகளுடன் ஒவ்வொரு செவிலியருக்கும் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள்தோறும் சிகிச்சைக்காக வரும் மக்களின் பதிவுகள் ஏற்றம் செய்வதுடன் அவர்களுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்தும் பதிவு செய்து மாத்திரைகள் வழங்கும் காலம் அவர்களுக்கு தெரிவிப்பதுடன் அதன்படி தேவையான மாத்திரைகள் வழங்க இந்த கருவி மிகப்பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் கிராமப்பகுதிகளிலுள்ள பொதுமக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை ஒருவர் விடுபடாத நிலையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காரணம் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதை உணர்ந்து ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தை பாதுகாத்திட தனிக்கவனம் எடுத்திட வேண்டும். பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் சுகாதாரத்துறையின் மூலம் நலவாழ்வு மையம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்; தெரிவித்தார்.
        பின்னர் சிகிச்சைக்கு பெற நபர்களுக்கு மாதாந்திர பரிசோதனைக்கான கையேடு வழங்கியதுடன் செவிலியர்களுக்கு கையடக்க கணினியினை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
        இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.யசோதாமணி, வட்டார மருத்துவர்கள் மரு.முத்துராணி, மரு.ரெஜி, மரு.ஆனந்த் ஆதவன், சுகாதார ஆய்வாளர்கள் மோகன், முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து