முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மகாளய அமாவாசை: சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

 போடி,-    போடியில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
     சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வதற்கு ஏற்ற தினங்களில் அமாவாசையும் ஒன்று. அதிலும் குறிப்பாக புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் பாவங்கள் தீரும், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திங்கள் கிழமை புரட்டாசி மகாளய அமாவாசை தினம் என்பதால் போடி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
     போடி பரமசிவன் மலைக்கோவிலில் சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. போடி கீழச்சொக்கநாதர் கோவிலில் கீழச்சொக்கநாதர் மற்றும் மேலச்சொக்கநாதர் தெய்வங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. போடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
     போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி திருக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. 16 வகை மங்கள பொருட்களால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. போடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
     போடி போஸ்பஜார் வெங்கடாசலபதி கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமது காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற அமாவாசை பூஜையையொட்டி காமாட்சியம்மன், வீருசின்னம்மன், சங்கிலிக்கருப்பன் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து