ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
14 kamuthi news

  கமுதி,- கமுதி அருகே பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டும் வழிபடும் விநோத திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இக்கிராம கண்மாய் கரையில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் பீடம் புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் பங்குபெறும் விநோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதற்காக அப்பகுதியில் கிராமத்தின் சார்பாக 1 வார காலத்திற்கு பெண்கள் கோவில் இருக்கும் பகுதிக்கு, சொந்த காரணங்களுக்காகவோ, விவசாய பணிகளுக்காகவோ  அனுமதிக்கபடுவதில்லை.  இத்திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து, கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டு எல்லை பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர். பின்னர்  அம்மன் பீடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு படைக்கப்பட்ட சாத உருன்டைகளை பனை ஓலையில் வழிபாட்டுக்கு சென்ற ஆண்களுக்கு பறிமாறப்பட்டது. ஒருவேலை சாத உருண்டைகள் மீதமிருந்தால்  அருகே குழி தோண்டி புதைத்து செல்வது வழக்கம். 1 வயது முதல் வயதானவர்கள் வரை ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு எல்லைப்பிடாரி அம்மனை வழிபட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து