முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வைகை அணை மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அதை தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறக்கப்பட்டது கடந்த சில நாட்களாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது அதோடு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது
 கடந்த மாதம் அதனை தொடர்ந்து பெரியாறு பாசன கால்வாய் கள்ளந்திரி கடைமடை திருமங்கலம் பாசன கால்வாய் மற்றும் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து தற்போது கடந்த சில வாரங்களாக அணை நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது எனவே அணை நீர்வரத்து அதிகரித்தது அதனை தொடர்ந்து 69 அடி எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அனைக்கு வரும் உபரி நீரை அப்படியே திறந்து விடப்படுவது வழக்கம் இன்று  அதிகாலை 69 அடியை எட்டியது எனவே மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வரும் உபரி நீரை அப்படியே  திறந்து விட்டனர் அதோடு அணைக்கு 3640 கன அடி நீர் வருகிறது அணையிலிருந்து 4260 கனஅடி நீர் திறக்கப்படுகிறது எனவே தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது யாரும் ஆற்றில் இறங்கவோ குளிக்க வேண்டாம் ஆற்றில் கால்நடைகளை இறக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில் இரண்டாவது முறை அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதில் எந்த ஒரு தடங்களும் இருக்காது என்று கூறினர் இதனால் இரண்டாவது முறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து