உலக சிக்கன நாள்-2018 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      தேனி
30 theni news

தேனி,- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறுசேமிப்புத்துறையின் சார்பில் உலக சிக்கன  நாள்-2018-யை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சிக்கனத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி, நடனப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற 61 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை   மாவட்ட ஆட்சி;த்தலைவர்  ம. பல்லவி பல்தேவ்   வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு கல்வி சார்ந்த பல நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர்கள் வாசிப்புத்திறனை மேம்படுத்தி கொள்ளுவதோடு, எழுத்திறனையும் மேம்பாடுத்திட வேண்டும். நன்கு புரிந்து பயின்றால் தான் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும். உயர்ந்த லட்சியத்தோடு, விடாமுயற்சியாக படிக்கும் போது எளிதில வாழ்வின் லட்சியத்தினை அடைந்திடலாம்  பள்ளியில் கல்வி கற்கும் பருவத்திலேயே மாணவ, மாணவியர்கள் சிக்கனமாக  சேமிக்கும் பண்பினை கடைபிடித்திட வேண்டும். நாம் சிறுக சிறுக சேமிப்பதின் மூலம் நமக்கு அதிகச் செலவினங்கள் மேற்கொள்ளும் போதும், எதிர்பாராத செலவினங்கள் நேரும்போது சேமித்த பணம் சேமிப்பு பழக்கங்கள் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், படிப்பினைத் தவிர்த்து சமுக அக்கரையுடன் செயல்பட்டு சுற்றுப்புறத்தினை நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுப்புற பாதிப்புகளை அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் எடுத்துக்கூறி பிளாஸ்டிக்கினை தவிர்த்திட வேண்டும். மேலும் டெங்கு கொசு உற்பத்தியாகமல் தடுப்பதற்கு நாம் விழிப்புடன்  பொதுமக்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்.  தெரிவித்தார்.
 இவ்விழாவில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு)  .சங்கரன் , வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மீனம்மாள் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து