முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கல்லறை திருவிழா

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல்லில் கல்லறை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் மூதாதையர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் _ திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் முதல் நாளே வந்து அங்கிருந்த குப்பை, செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் இறந்த தங்கள் உறவினர்களின் கல்லறைகளுக்கு பல வண்ண பெயிண்ட் அடித்து அழுகு படுத்தினர். நேற்று கல்லறைகளில் பல வண்ண பலூன்களை வைத்தும், பூக்களை வைத்தும் அலங்காரம் செய்தனர். மேலும் மெழுகுவர்த்தி ஏந்தியும் பிரார்த்தனை செய்தனர். தங்கள் உறவினர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், இறந்த எங்கள் முன்னோர் எப்போதும் எங்களுடன் இருப்பதாகவே நினைத்து அவரை மகிழ்விக்கும் வகையில் கல்லறை திருவிழா வழிபாடு நடத்துகிறோம். இதன்மூலம் எங்களுக்கு மனநிம்மதி அடைவதோடு அவர்களின் ஆன்மாவும் சாந்தியடையும் என நம்புகிறோம். இந்த நாளில் வெளியூர்களில் உள்ள உறவினர்களும் வந்து கலந்து கொள்வது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து