காயமடைந்தவரை தனதுபாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தமிழக துணை முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 2 டிசம்பர் 2018      தேனி
2 ops news

தேனி - தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம்  சாலை விபத்தில் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தேனி மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கண்டமனூர் பகுதிக்கு வந்தார். பின்னர் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக போடிநாயக்கனூருக்கு செல்லும் வழியில் பழனிசெட்டிபட்டியில் சாலையை கடக்க முயன்ற இமயம் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சின்னதாஸை எதிர்திசையில் வந்த வாகனம் மோதியது. இதில் அவர் காயமடைந்தார். இதனை பார்த்த கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது வாகனத்தை நிறுத்தி, இறங்கி காயமடைந்தவரை உடனடியாக தனது பாதுகாப்பு வாகனத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போடிநாயக்கனூர் சென்றார். விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்ற உடனடியாக தனது பாதுகாப்பு வாகனத்தில் அனுப்பி வைத்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நீடுடி வாழ வேண்டும், நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனதார பாராட்டி வாழ்த்தினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து