முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனிசெட்டிபட்டி பேரூர் பகுதி அ.தி.மு.க அலுவலகத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 10 டிசம்பர் 2018      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூர் பகுதி அதிமுக அலுவலகத்தை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்  முன்தினம் திறந்து வைத்தார்.
 கடந்த சில மாதங்களுக்கு முன் பழனிசெட்டிபட்டி பேரூர் கழக செயலாளராக தீபன்சக்கரவர்த்தியை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களும் அறிவித்தனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் அனைத்து வார்டுகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
 பழனிசெட்டிபட்டி கழக நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், கழக பணி ஆற்றுவதற்கும் வசதியாக மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனையின்படி பேரூர் கழக செயலாளர் தீபன்சக்கரவர்த்தி முயற்சியில் பேரூர் கழக அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தை கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றியும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவி வணங்கினார். இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்தபன், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரூர் கழக செயலாளர் தீபன்சக்கரவர்த்தி நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிசெட்டிபட்டி பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து