முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, 8 ஜனவரி 2019      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி .-     தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு , ஏலக்காய் , 2 அடிகரும்பு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் வழங்கவும் உத்தரவிட்டது.
     அதன்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள 9 முழு நேரக் கடைகள், 6 பகுதி நேர கடைகளில் உள்ள 17 ஆயிரத்து முந்நூற்றி 96 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 1000 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கார்த்தியாயினி தலைமை தாங்கினார். தாசில்தார் அர்ச்சுணன் முன்னிலை வகித்தார். பண்டகசாலை தலைவர் முத்து வெங்கட்ராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் லோகிராசன் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார்.ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.நிகழ்ச்சியில் பண்டகசாலை துணைத் தலைவர் பாரத், மேலாளர் கோட்டைச் சாமி, அதிமுக மகளிரணி கொடியம்மாள், கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளைப் பாண்டி, மாவட்ட பிரதிநிதி கவிராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், முல்லையம்பட்டி சங்கத்திற்கு உள்ளிட்ட ரேசன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து