முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை

திங்கட்கிழமை, 14 ஜனவரி 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக நேற்றும் உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 40 காசுகள் உயர்ந்துள்ளது.

மீண்டும் விலையேற்றம்...

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலையேறத்துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளதால், விலை ஏறி வருவதாக எண்ணய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விலை ஏற்றம்...

நேற்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல், நேற்று முன்தினம் விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும்,  டீசல், நேற்று முன்தினம் விலையில் இருந்து 53 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.78 ஆகவும் விற்பனையானது.

உடனடி எதிரோலி...

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையில் உடனடியாக எதிரொலிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து