அகிலேஷ், மாயாவதியை பிரதமராக முன்னிறுத்தி பரபரப்பு பேனர்கள்: உ.பி. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      அரசியல்
Akhilesh-Mayawati-poster 2019 01 25

லக்னோ, அகிலேஷ் மற்றும் மாயாவதியை பிரதமராக முன்னிறுத்தி அடுத்த பிரதமர் என்று உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளன. இந்த இரு கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளியான சில நாட்களில், உத்தர பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் அகிலேஷ் யாதவ்தான் அடுத்த பிரதமர் என்ற வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லக்னோவில் திரும்பும் இடங்களில் எல்லாம் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதே போல், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பிறந்த தினத்தன்று, அக்கட்சியினர் மாயாவதிதான் அடுத்த பிரதமர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை லக்னோவின் பல்வேறு இடங்களில் ஒட்டியிருந்தனர். இரு கட்சிகளும் தங்களின் தலைவர்களை அடுத்த பிரதமர் என முன்னிறுத்தி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது உத்தர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து