முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினம்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2019      விருதுநகர்
Image Unavailable

 -  துபாய் நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தி-இந்து-இந்துஸ்தான் என்று ஒற்றை நாடு, ஒரே மொழி என்ற கொள்கை வேரூண்டத் தொடங்கிய நாளில் தமிழுக்கென தனிச்சிறப்புமிக்க இடத்தை வாங்கிக் கொடுத்து தமிழ் நெஞ்சங்களில் எங்கும் நீங்காத புகழ் படைத்தவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஆவார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் நாடு முழுவதிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது. அண்ணாவின் 50வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். வெளிநாடுகளில் பால்விற்பனையை தொடங்கி வைக்க சென்றுள்ள தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துபாய் நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ், சேலம் பால்பண்ணை ஒன்றியத் தலைவர் ஜெயராமன், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் துபாய் நாட்டின் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து