ஏழை மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      தமிழகம்
jayakumar 2018 10 19

சென்னை : ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கை...

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, நத்தம்விஸ்வநாதன், முன்னாள் எம்.பிக்கள் ரவிபெர்னாட், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில்,

அம்மா அலை வீசுகிறது...

ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம், அதற்கு தடை போட முடியாது. ஆனால் அ.தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து விட்டார். அதனை விரைவில் வெளியிடுவார் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க. கூட்டணி யாருடன் என்பது தெரிந்து விடும். பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை அம்மாவின் சாதனைகளுக்கு மக்கள் அபரிமிதமான வெற்றியை தருவார்கள். தமிழ்நாட்டில் அம்மா அலை வீசுகிறது. அதை மீறி யாரும் வெற்றி பெற்றுவிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து