ராமேசுவரம் திருக்கோயிலில் சுவாமி,அம்மன் தேரோட்டம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      ராமநாதபுரம்
5 rms temble

  ராமேசுவரம்,-   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில்  மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி இன்று   காலையில் நடைபெற்ற சுவாமி,அம்மன் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.

ராமேசுவரம் திருக்கோயிலில் பிப்ரவரி 25 ஆம் தேதி  காலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திருவிழா நிகழ்ச்சியில் தினசரி சுவாமி,அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறது. இதனை தொடர்ந்து  கோயிலின் நந்தவன கலையரங்கில் தினசரி இரவு ஆன்மீகச் சொற்பொழிவும்,சிறப்பு பட்டிமன்றம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து எட்டாம் நாள்  திருவிழாவான மகாசிவராத்திரியையொட்டி திங்கள் கிழமை இரவு முழுவதும் திருக்கோயில் நடைகள் திறக்கப்பட்டிருந்ததையை முன்னிட்டு பக்தர்கள் இரவு முழுவதும் சுவாமி சன்னதிகளில் நடைபெற்று சிறப்பு பூஜைகளிலும்,மேலும் அன்று இரவு நடைபெற்ற சுவாமி,அம்மன் வெள்ளி ரதத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.  தொடர்ந்து திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி திருக்கோயிலில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தின் அம்மன் சன்னதியில்  சிறப்பு பூஜைகளும்,தீபாரதணை வழிபாடுகளும் நடைபெற்றன. பின்னர் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி நான்குரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதியில் இழுத்து சென்று சுவாமியின் அருள்பெற்றனர். நிகழ்ச்சியில்  கோயில் தக்கார் குமரன் சேதுபதி,கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி,உதவி ஆணையர் குமரேசன்,மேலாளர் முருகேசன்,கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன், உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன்,இளநிலைபொறியாளர் ராமமூர்த்தி, பேஷ்கார்கள் அண்ணாத்துரை,கலைச்செல்வம்,கண்ணன்,செல்லம், இனை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன்,கோயில் மருத்துவர் முருகன்,அலுவலர்கள் கணேசமூர்த்தி,இராமநாதன்,முனியசாமி,பழனிமுருகன்    ராமேசுவரம் டி.எஸ்.பி மகேஸ். மற்றும்  யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் உள்பட  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.                                                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து