முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1 லட்சத்திற்கு மேல் நடக்கும் கட்சிகளின் பணப்பரிவர்த்தனையை வங்கிகள் கண்காணிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவு

புதன்கிழமை, 20 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ.1 லட்சத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் பெயரால் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அறிவுறுத்தல்...

தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து வங்கி அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக் கணக்கு மற்றும் பணப்பரிமாற்றம் குறித்துத் தொடர் கண்காணிப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கிக் கணக்கில் திடீர் பண வரவு குறித்தும் கண்காணித்து அது குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்காணிக்கும்...

மேலும் ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் தொடர்பான ஆவணம் மேலும் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். இந்த விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.மேலும் இணையம் மூலம் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பரிமாற்றம் இருந்தால் வருமான வரித்துறைக்குத் தகவல் அளிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி மற்றும் அரசியல் பிரமுகர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்து மேல் பரிமாற்றம் நடைபெற்றாலும் இதனை வருமான வரித்துறை கண்காணிக்கும். தமிழகத்திற்குச் சிறப்புச் செலவின பார்வையாளரை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

பணம் பறிமுதல்...

இதுவரை ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.12 கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் (19ம் தேதி) ரூ.3 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் ரூ.5 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள 94 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.8 கிலோ வெள்ளி மற்றும் மதுபான பாட்டில்கள், சிறிய பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2,100 வழக்குள்...

பணம் பறிமுதல் தொடர்பாக இதுவரை 2,100 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில்  (அரசு இடங்கள் உள்ளிட்ட) 1,061 ஆயிரம் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. 1,028 தனியார் இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் வாக்காளர்களுக்குத் தேவையாகத் தண்ணீர், உணவு, மருத்துவ வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றுதேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வாகனத்தில் கட்சிக் கொடியைப் பயன்படுத்தச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும். அரசியல் கட்சியினர் கூட்டணிக் கட்சியின் சின்னங்களை வாகனத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி பெறவேண்டும். இந்த செலவுகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து