பரமக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் ஏற்பு.

திங்கட்கிழமை, 25 மார்ச் 2019      ராமநாதபுரம்
25 parama  news

 பரமக்குடி - பரமக்குடி ஐந்து முனை சந்திப்பில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் ஏற்கப் பட்டது.
 முன்னதாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற ( தனி) இடைத் தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 மேலும் அனைவரும் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்கிற்காக பணம் வாங்க மாட்டோம் என
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அனைவரும் ஈறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு, ஊரக வளர்ச்சி மாவட்ட திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, பரமக்குடி உதவி தேர்தல் அலுவலர் ராமன், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாத்துரை, பரமக்குடி வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சாந்தி, பரமக்குடி நகராட்சி இளநிலை பொறியாளர் லெட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி  உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து