தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2019      ராமநாதபுரம்
 31 BOOTH OFFICERS TRAINING

 ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளியிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சோணைமீனாள் கலைக்கல்லூரியிலும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 பரமக்குடி ஆயிர வைசியா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சியின்போது, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பொது பார்வையாளர் ஆனந்த் ஸ்வரூப் முன்னிலை வகித்தார். இப்பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:- நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன்படி, மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1364 வாக்குச்சாவடி மையங்கள்  அமைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்வுதள வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.  வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,615 வாக்குச்சாவடி அலுவலர்களும், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1,504 வாக்குச்சாவடி அலுவலர்களும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,169 வாக்குச்சாவடி அலுவலர்களும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,060 வாக்குச்சாவடி அலுவலர்களும் என மொத்தம் 7,348 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி நடைபெறுகிறது.  தேர்தல் வாக்குப்பதிவினை அமைதியான முறையில் நிறைவேற்றுவதில் வாக்குச்சாவடி அலுவலர்களின் பங்கு மிகவும் முக்கயமானதாகும்.  ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலரும் வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய தினமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு தேவையான தளவாட சாமான்கள், பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.  அதேபோல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றை கையாளும் முறை குறித்து முழுமையாக அறிந்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து உறுதிபடுத்திடும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தி சான்றொப்பம் இட வேண்டும்.  அதே வேளையில், வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு முடிவினை நீக்கி வாக்குப்பதிவிற்கு தயார் செய்திட வேண்டும்.  இதுதவிர, வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த ரகசியத்தினை பாதுகாத்திடும் வகையில் வாக்குச்சாவடி அமைப்பினை ஏற்படுத்திட வேண்டும்.  மேலும், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களும் தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்திட ஏதுவாக முன்னதாகவே உரிய படிவம் சமர்ப்பித்து தேர்தல் பணி சான்றிதழ்ஃதபால் வாக்குச்சீட்டு பெற்றிட வேண்டும்.  அதன்படி, தேர்தல் நடைமுறைகளில் இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ள விதிமுறைகள் எவ்வித பாரபட்சமுமின்றி முறையே பின்பற்றி பொதுமக்கள் சுதந்திரமாகவும், அமைதியான முறையிலும் தங்களது வாக்கினை பதிவு செய்திட ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு  தெரிவித்தார்.
 இந்நிகழ்வுகளின்போது, உதவி தேர்தல் அலுவலர்கள் (பரமக்குடி) எஸ்.ராமன், (முதுகுளத்தூர்) கயல்விழி உட்பட வட்டாட்சியர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து