முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக திகழ்கிறார் : தவானுக்கு கங்குலி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார் என்று இந்திய முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் ஆலோசகருமான கங்குலி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை டெல்லி அணி 18.5 ஓவர்களில் எட்டிப் பிடித்தது. டெல்லி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 97 ரன்களுடன் (63 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

தவானுக்கு சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட போது, அவர் மூன்று இலக்கத்தை தொட 3 ரன் தேவையாக இருந்தது. அப்போது காலின் இங்ராம் (14 ரன்) சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்து விட்டார். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஆட்டநாயகன் விருது பெற்ற 33 வயதான தவான் கூறுகையில், சதம் அடிப்பது எனக்கு விருப்பமான ஒன்று தான். 100 ரன் எடுத்திருந்தால் அது 20 ஓவர் கிரிக்கெட்டில் எனது முதல் சதமாக இருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் தனிப்பட்ட சாதனையே விட அணியின் லட்சியமே முக்கியம். அதனால் தான் முந்தைய பந்தில் ரிஸ்க் எடுக்காமல் ஓடி ஒரு ரன் எடுத்தேன். 97 ரன்கள் எடுத்ததே எனக்கு சதம் மாதிரி தான் என்று கூறியிருந்தார்.

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவான், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த வரிசையில் 4-வதாக டோனியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார். நிலைத்து நின்று அதிரடியாக ஆடத் தொடங்கி விட்டால், அவரை எதிரணி பவுலர்கள் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய வடிவிலான போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தரமான ஆட்டக்காரர் தவான். உலக கோப்பை கிரிக்கெட் வேறு வடிவிலான (50 ஓவர்) போட்டி. தவான் ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடி இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் அசத்துவார். இவ்வாறு கங்குலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து