ராகுல் மீது குஜராத் மந்திரி கடும் தாக்கு : முதல்வரே கண்டனம் தெரிவித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      இந்தியா
Vijay Rupani 2019 04 21

Source: provided

அகமதாபாத் : மோடி நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் போல் தெரிகிறது. ஆனால், சீனா அல்லது பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி போல் ராகுல் காந்தி தெரிகிறார் என குஜராத் மந்திரி குறிப்பிட்டுள்ளார்.  

குஜராத் மாநிலத்தில் நேற்று  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில மந்திரி கன்பத் வசவா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி எழுந்து நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் நிற்பதுபோல் தெரிகிறது. ஆனால், ராகுல் காந்தி நின்றால் வாலாட்டும் நாய்க்குட்டி போல் தெரிகிறார். சீனா ஒரு ரொட்டியை வீசினால் அவர் சீனாவுக்கு போவார். 

பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்காக பாகிஸ்தானுக்கு போவார் என கன்பத் வத்சவா செய்திருக்கும் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவரது கருத்துக்கு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பரபரப்பான தேர்தல் பிரசார காலங்களில் இதுபோன்ற தரக்குறைவான தனிநபர் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து