கொடைக்கானலில் மே 18, முதல் மூன்று நாட்கள் மலர்க்கண்காட்சி
கொடைக்கானல் - கொடைக்கானலில் மே 18, 19 ,20, ஆகிய மூன்று நாட்கள் மலர்க்கண்காட்சி விழா.
கொடைக்கானலில் ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களும் குளுகுளு சீசன் காலங்களாகும். மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொடைக்கானல் போட் கிளப் சார்பில் படகு போட்டிகள் நடத்தப்படும். சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். விளையாட்டு துறை சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொடைக்கானலில் நடத்தப்படும் .இதுபோல தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி விழா நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெற உள்ள 58 வது மலர் கண்காட்சி விழா வரும் மே மாதம் 18, 19 ,20 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்படும் மலர் கண்காட்சி விழா இந்த ஆண்டு மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி விழாவில் மலர் கண்காட்சி அரங்கம் உருவாக்கப்பட்டு பல லட்சம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்படும் .இந்த மலர் கண்காட்சியில் மலர்களால் ஆன உருவங்கள், அமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக தோட்டக்கலைத்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த தகவலை கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நாராயணசாமி தெரிவித்தார்.