முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்த அ.ம.மு.க. பிரமுகர் கைது

புதன்கிழமை, 1 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த அ.ம.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் _ பழனி சாலை சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் ஒ.ஜே.பாண்டி. இவர் திண்டுக்கல் அ.ம.மு.க. வடக்கு பகுதி செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக நகர் மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது பாண்டி வீட்டின் ஒரு அறையில் ரகசியமாக 1500 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பாண்டியையும் கைது செய்தனர். இந்த மதுபாட்டில்களை எந்த கடையில் இருந்து வாங்கி வந்தார்? அவருக்கு உதவியது யார்? என்ன காரணத்திற்காக இவ்வளவு மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திண்டுக்கல்லில் நேற்று மே முதல் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. நாகல்நகர் ரயில்வே மேம்பாலம் அருகே ரகசியமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர் வடக்கு போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சிறுமலையைச் சேர்ந்த சசிக்குமார், நிலக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து 180 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து