முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா 9-ம் தேதி துவக்கம்

வெள்ளிக்கிழமை, 3 மே 2019      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 9-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் தினமும் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளி புதுமண்டபம் சென்று அங்கு பக்தி உலாத்துதல், தீபாராதனை முடிவடைந்தவுடன் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து கோவிலை அடைவர். 18-ம் தேதி காலை புது மண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதிகளை சுற்றி வந்து கோவிலை வந்தடைவர். இதைத் தொடர்ந்து 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அருளாளர் திருஞான சம்பந்தர் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி வரும்  21-ம் தேதி காலை திருஞான சம்பந்தர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுடன் 4 ஆவணிமூல வீதிகளில் புறப்பாடு நடக்கிறது. மேலும் அன்று இரவு 8 மணியளவில் திருஞான சம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளிலும் வீதி உலா புறப்பாடு நடைபெறுகிறது. வசந்த உற்சவ விழாவையொட்டி வருகிற 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கோவில் சார்பில் உபய தங்க ரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட மாட்டாது என்று மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உபகோவிலான திருவாதவூர் திருமறை நாதசுவாமி கோவில், அருளாளர் மாணிக்கவாசகர் அவதார திருத்தலமாகும். இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா வருகிற 8-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய திருநாட்களான 13-ம் தேதி காலை சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருளுதலும், 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணமும், 17-ம் தேதி காலை 5 மணி முதல் 6 மணிக்குள் திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து