முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விருதுநகர் கலெக்டர் சிவஞானம், அறிவுரை

திங்கட்கிழமை, 13 மே 2019      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்,- விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வி நிறுவனங்களின் வாகனங்கள்   விருதுநகர் ஆயுதப்படையில் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மு.ராசராசன்,  முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் .அ.சிவஞானம்,  தலைமையில் குழு ஆய்வு செய்தது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் 
தெரிவிக்கையில்:-
 பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி மாதம்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் போக்குவரத்து துறையின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி பள்ளி வாகனங்கள் குழு ஆய்வின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று 13.05.19 விருதுநகர் ஆயுதப்படையில் மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில்  உள்ள 44 பள்ளிகளின் 206 வாகனங்களில் 169 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரத்தில்  உள்ள 32 பள்ளிகளின் 174 வாகனங்களில் 138 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளைச் சேர்ந்த 307 வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து வாகனங்களில் அவசரகால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா  போன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்கள். பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 73 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்து அனைத்து இனங்களும் சரியான முறையில் உள்ள வாகனங்கள் பொதுசாலைகளில் இயக்க அனுமதிக்கப்படும். பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். திருவில்லிபுத்தூர், சிவகாசி போக்குவரத்து அலுவலகங்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவித்தார்கள். பின்னர் தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள  தீயணைப்புக்கருவிகள் அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்கப்படாத 39 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்களின் குறைபாடுகள் சரி செய்யப்பட்டவுடன் பொது சாலையில் இயக்க அனுமதி அளிக்கப்படும். மேலும் சென்ற ஆண்டில் எந்த ஒரு விபத்தில்லாமல் பணியாற்றிய பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம், அறிவுறித்தினார்கள்;.
இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள்  எம்.சந்திரசேகரன்(விருதுநகர்),  ரவிச்சந்திரன்(திருவில்லிபுத்தூர்), வாகன ஆய்வாளர்  .இளங்கோ, விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  .சுவாமிநாதன், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து