டெல்லியில் சோனியாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2019      அரசியல்
Chandrababu Naidu-Sonia  2019 05 19

புது டெல்லி, டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

2019 பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக 59 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்று அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்து பேசினார். இந்நிலையில் லகனோவில் இருந்து டெல்லி திரும்பிய சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். ஏற்கனவே அவர் காலையில் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து