அளவீட்டு முறையில் மாற்றம் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      உலகம்
Measurement Mode 2019 05 21

பாரீஸ், நாம் வாங்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் எடையை அறிய கடைக்காரர்கள் பயன்படுத்தும் எடைக்கற்கள் முறை இனி புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் எடையை சரிபார்க்கும் எடைக் கற்கள் முறையை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அளவுகள் கொள்கை அமைப்பு ஏற்கனவே முடிவு செய்து விட்டது. இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் 50 கிராம், 100 கிராம்,200 கிராம், 500 கிராம் மற்றும் ஒரு கிலோ, 2கிலோ, 5 கிலோ உள்ளிட்ட அனைத்து எடைக் கற்களும் இனி பயன்பாட்டில் இருக்காது.

இதற்கு பதிலாக நவீன முறையின் படி மிக துல்லியமாக அளவிடும் மின்காந்த அளவீட்டுக் கருவிகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முதலே புதிய அளவீட்டு நடைமுறை உடனடியாக அமலுக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடங்க இந்திய தேசிய திட்ட நிறை ஆய்வகம் திட்டமிட்டுள்ளது. எடை மட்டுமல்லாது, திரவ பொருட்களை அளக்கும் முறை, மின்சாரத்தை அளக்கும் முறை மற்றும் வெப்பநிலையை அளக்கும் முறையிலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து