டெல்லியில் 7 தொகுதிகளையும் கைப்பற்றும் பாரதீய ஜனதா

வியாழக்கிழமை, 23 மே 2019      இந்தியா
BJP

புது டெல்லி, டெல்லியில் மொத்தம் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் படிகளை அடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளான சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய அனைத்திலும் பா.ஜ.க. முன்னிலை பெற்று கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து