சூரத் நகரில் கோச்சிங் வகுப்பில் தீவிபத்து: 15 குழந்தைகள் பலி - பிரதமர் மோடி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 24 மே 2019      இந்தியா
Fire in Cochin class  15 children killed 2019 05 24

அகமதாபாத், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. நேற்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 15 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மளமளவென பரவிய தீயை அணைக்க 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடினர். தீ விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என சூரத் காவல் ஆணையர் சதீஷ்குமார் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குஜராத் முதல்வர்  விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். சூரத் நகரில் தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து