முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் பகுதியில் காணாமல் போன கருங்குரங்கு மாம்பழம்-புதிய மாங்கன்றுகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

புதன்கிழமை, 29 மே 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,   திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் மாம்பழ சீசன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த வருடம் கடும் வறட்சியின் காரணத்தினால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் பாய்ச்சி அதன் மூலம் மகசூல் கிடைத்தது. இதில் கல்லாமை ஒரு கிலோ ரூ.15க்கும், காசா,பாலாமணி தலா ஒரு கிலோ ரூ.20க்கும்,  பங்கனவல்லி கிலோ ரூ.40க்கும், இமாம்பஜந்த் கிலோ ரூ.80 முதல் 90 வரை தரத்திற்கு தகுந்தாற் போல் விலை போகிறது.நாட்டுகாய்கள், ஊறுகாய் காய்கள் கிலோ ரூ.10க்கும், விற்பனையாகிறது. மேலும் இந்த வருடம் மாங்காய் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால்விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை இழப்பு என்று கூறப்படுகிறது. மாம்பழ சீசன் ஜுன் மாதம் கடைசி வரை இருக்கும்.பொதுவாக முக்கனிகளில் முதல் கனி என்று கூறப்படுவது மாங்கனி. இக்கனி தரும் மாமரங்கள் அதிக அளவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நத்தம் வட்டாரத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ குணம் நிறைந்த இந்த மாங்கனிகளில் கருங்குரங்கு என்ற வகை ஒரு மாங்கனியாகும். இது கடந்த சில வருடங்களாகவே கடுமையான வறட்சியின் காரணத்தினால் விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. தவிர இந்த வருடமும் வாடிக்கையாளர்கள் மாங்காய் விற்பனை செய்யும் மொத்த கடைகளிலும், சில்லரை கடைகளிலும் கருங்குரங்கு பற்றி கேட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். இந்த அரியவகை மாங்கனிக்காக தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை சிறப்பு கவனம் செலுத்தி கருங்குரங்கு மாங்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென்று மா விவசாயிகள் சார்பாக தென்னை, மா, புளி,பழப்பண்ணைகளின் விவசாயிகள் சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து