ஆரோக்கியத்துடன் உள்ள மாணவர்களால் மட்டுமே கல்வியில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும். அழகப்பா துணைவேந்தர் பேச்சு

திங்கட்கிழமை, 3 ஜூன் 2019      சிவகங்கை
3  alagappa Vice Chancellor

காரைக்குடி.- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்ககம் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மேஜை பந்தாட்ட போட்டியின் துவக்க விழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 30.05.2019 அன்று நடைபெற்றது.  இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழகப் பல்கலைக்கழகங்களிலிருந்து மொத்தம் 8 அணிகள் பங்கு பெற்றன.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகள் விபரம் பின்வருமாறு: ஆண்கள் பிரிவில் சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்  முதலிடத்தையும் சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றன. மகளிர் பிரிவில் சென்னை பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நா.இராஜேந்திரன் அவர்கள் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். மேலும் இப்போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூபாய் ஐம்பதாயிரமும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூபாய் முப்பத்தியேழாயிரத்து ஐநூறும், மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரமும்; ரொக்கமாக வழங்கப்பட்டது. அப்போது துணைவேந்தர் பேசியதாவது : கல்வியையும் விளையாட்டையும் தமது இரு கண்களாகப் போற்றியவர் வள்ளல் அழகப்பர்.  அதற்காகத்தான் கல்வியியல் கல்லூரியையும் உடற்கல்வியியல் கல்வியையும் முதலில் காரைக்குடியில் தோற்றுவித்தார். ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கல்வியோடு இணைந்த விளையாட்டும் அவசியம் என்றார்.  நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள மாணவர்களால் மட்டுமே கல்வியில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும். விளையாட்டே சமூகத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கின்றது.  குழு மனப்பான்மையையும், ஒருமைப்பாட்டையும் உருவாக்குகிறது.  எனவே மாணவர்கள் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், கீதா இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் இரா.செந்தில்குமரன் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். இணைஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் எஸ்.சரோஜா மற்றும் முனைவர் டி.பி.யோகே~; ஆகியோர் செயல்பட்டனர். முனைவர் சி.வயிரவசுந்தரம்  வரவேற்புரை ஆற்றியதோடு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.  முனைவர் எஸ்.சரோஜா உதவிப் பேராசிரியர், உடற்கல்வியியல் கல்லூரி நன்றி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து