முல்லை பெரியார் அணை பலமாக உள்ளது மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      தேனி
5 Mullai Periyar dam

தேனி   முல்லைபெரியார் அணை பலமாக உள்ளது என மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.
தேனி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த 2014 மே மாதம் 7ல் உத்திரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர்; தலைமையில் மூவர் குழுவை அமைத்தது.
தற்போது அக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். இந்த குழுவில் தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வள ஆதார அமைப்பின் அரசு செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர்.
 தற்போது முல்லைபெரியார் அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. தற்போது கேரளாவில் பருவமழை தொடங்க உள்ளதால் மழைகாலத்தில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வல்லக்கடவு வழியாக அணைக்கு மின்சாரம் மற்றும் அணையை பலப்படுத்த கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லவும் அணை பாதுகாப்பு குறித்தும், அணையின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்ய வந்த மூவர் குழு மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகு பகுதி, அணையின் நீர்கசிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் மதகு பகுதியில் 1வது மதகை இயக்கி பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1வது மைல் பகுதியில் அமைந்துள்ள கமிட்டி அலுவலகத்தில் ஆய்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் முல்லைபெரியார் அணை பலமாக உள்ளது. பேபி அணையை பலப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், அதிகாரிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கின்றோம். முல்லை பெரியார் அணையில் உள்ள மதகு பகுதியில் மத்திய நீர் மேலாண்மை வழிகாட்டுதலின்படி புதிய தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளோம். மேலும் காவேரி தொழில் நுட்பக்குழுத்தலைவர் சுப்பிரமணி கூறும்போது தமிழ் அன்னை படகு இயக்குவது குறித்தும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கேரள வாகன நிறுத்தம் அமைப்பது குறித்தும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து