முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூதியில் துப்பாக்கிச்சூடு - ஏமனில் 5 பேர் உயிரிழப்பு

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஏடன் : ஏமனில் மசூதியில் நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அங்கு அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தாலியா மாகாணத்தில் அசாரிக் மாவட்டத்தில், ஒரு மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் ஒரு வாகனத்தில் வந்து இறங்கினர். அவர்கள் இறங்கிய வேகத்தில், மசூதியில் நுழைந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் பதறியடித்தவாறு நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர். இதற்கிடையே தாக்குதல்களை நடத்தியவர்களும், அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். அவர்கள் தங்களுடன் 3 பேரை கடத்திச்சென்றனர். இந்த தாக்குதலின் போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த 5 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என உடனடியாக தெரிய வரவில்லை. இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து