கடும் வெள்ளம் எதிரொலி: சிக்கிமில் சிக்கி தவிக்கும் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Sikkim floods 2019 06 18

சிக்கிம் வடக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கி தவித்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டீஸ்டா நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சங்தாங் - லச்சென் - தாங்கு இடையே பல்வேறு பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது. லேச்சன் பகுதியில் இருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸிமா என்ற இடத்தில் மட்டும் 250 முதல் 300 சுற்றுலா பயணிகள் வரை சிக்கிக் கொண்டனர். நீர் சூழ்ந்த விடுதிகளில் இருந்த வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு லச்சென் பகுதிக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வடக்கு சிக்கிமில் மோசமான வானிலை நிலவுவதால் லச்சென், லச்சங், டிசோங்கு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து