சீனாவில் செயற்கைச் சூரியனை ஒளிர வைக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      உலகம்
artificial sun 2019 06 22

பெய்ஜிங் : தாங்கள் உருவாக்கிய செயற்கைச் சூரியனை ஒளிர வைக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1999-ம் ஆண்டு முதல் செயற்கைச் சூரியன் என்று அழைக்கப்படும், சோதனை ரீதியாக மேம்படுத்திய மீக்கடத்தி டோக்காமாக் என்ற எந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவதுபோல, இந்த எந்திரத்தில் செயற்கையாக சூரியசக்தியை உருவாக்க முடியும். இதற்கான மீக்கடத்திப் பொருட்களை அமெரிக்கா தருவதாகக் கூறி பின்னர் பின்வாங்கியது. இதனையடுத்து சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின், தரம் வாய்ந்த மீக்கடத்திப் பொருட்களை உருவாக்கி உள்ளனர். இவை அந்த எந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன. இந்த எந்திரம் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகி விடும் என்றும், 2050-ம் ஆண்டு முதல் தொழில் முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து