உலகக்கோப்பை கிரிக்கெட் 28-வது லீக்: ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      விளையாட்டு
india bat 2019 06 22

சவுத்தாம்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.

ரோகித் அதிர்ச்சி...

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 28-வது லீக் ஆட்டம் சவுத்தாம்டனில் நேற்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

225 ரன்கள் இலக்கு...

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி அரை சதமடித்தனர். கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ் 52 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து