Idhayam Matrimony

நச்சுக்காற்றை சுவாசித்ததால் விபரீதம் 75 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி: மலேசியாவில் 400 பள்ளிகள் மூடல்

புதன்கிழமை, 26 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

மலேசியாவில் பசிர் குடங் நகரில் உள்ள 15 பள்ளிக்கூடங்களில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது.

மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் உள்ள பசிர் குடங் நகர் தொழில்துறை நகரமாக விளங்குகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்குள்ள கிம்கிம் என்ற ஆற்றில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் இருந்து நச்சுவாயு வெளியேறி அதனை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கடந்த மார்ச் மாதம் நச்சுக்காற்றை சுவாசித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், பசிர் குடங் நகரில் உள்ள 15 பள்ளிக்கூடங்களில் சுமார் 75 மாணவர்களுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுக்காற்றை சுவாசித்ததே மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே பசிர் குடங் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒரு வார காலத்துக்கு மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து