எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எச்.ராஜா, மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மூலம் நன்கு குணமடைந்து வருகிறார். அவர், தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடி வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜாவின் உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும் அவர் பூரண குணமடைய வேண்டும் என்று குடும்பத்தினரிடம் முதல்வர் விருப்பம் தெரிவித்தார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்று நலம் விசாரித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


